புதிய புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. – திலித்


சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.”நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவறுகளே உள்ளன. அரசாங்கம் கொண்டுவரும் விடயத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று… சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று யாராவது சொன்னால்… அது மிகப்பெரிய முட்டாள்தனமான கதையாகும்.இதில் ஒரு ‘சிறப்பான’ புத்தகம் உள்ளது. ஆறாம் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்டு புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் உள்ளன. முதலாமவர் – ஏ.டி. ஆரியரத்ன. ஏ.டி. ஆரியரத்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், உலகத்தில் யார்  நினைக்கிறார்கள்? இலங்கையில் யார் நினைக்கிறார்கள்? உபாலி விஜேவர்தன வாழ்ந்த நாடு இது. அடுத்ததாக எமது சித்தாலோப முதலாளியைப் போட்டுள்ளார்கள். உலகப் புகழ் பெற்ற இரண்டாவது தொழில் முயற்சியாளர் ஹெட்டிகொட அவர்களாம். மூன்றாவது இடத்தில், சிறிய கடையொன்றை நடத்திச் செல்லும் அச்சலா என்ற எனக்குத் தெரிந்த தங்கையொருவரின் பெயரைப் போட்டுள்ளார்கள். அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்டபோது, தனது பெயர் ஏன் போடப்பட்டுள்ளது என்று அவருக்கே தெரியவில்லை.அடுத்ததாக பில் கேட்ஸ் உள்ளார், அதன் பிறகு வாரன் பஃபெட் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க். இவர்களுக்கு இடையில்தான் ஹெட்டிகொடவின் பெயரும், ஆரியரத்னவின் பெயரும் உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்கள் என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உலகையே அதிரவைத்த தொழில் முயற்சியாளர்கள். இப்போதும் அதிரவைக்கும் வர்த்தக நாமங்கள் எத்தனை உள்ளன? இந்தப் பக்கத்தை வாசித்த எந்தவொரு சிறுபிள்ளையும் வாழ்க்கையில் தொழில் முயற்சியான்மையைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகுதிகளில் என்ன இருக்கிறது என்று நீங்களே சும்மா வாசித்துப் பாருங்கள்.ஆகவே இதனைச் சீர்திருத்துங்கள் என்றே நாம் சொல்கிறோம். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். நாங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பித்து, பெற்றோரின் கருத்துக்களைப் பெற்று, பிள்ளைகளின் கருத்துக்களைப் பெற்று, ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கல்வி நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று இதனைச் செய்வோம் என்றே சொல்கிறோம். வேண்டாம் என்று சொல்லவில்லை.”

Related Posts

தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more
கரிநாள்-போராட்டத்தில்-சகல-மக்களும்-திரள-வேண்டும்!

கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

Read more

இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை? : முன்மொழிவு கையளிப்பு

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, தமது வீட்டிற்குரிய…

Read more

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கைதானவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு  என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம்…

Read more

NPP MPக்கு எதிராக – முன்னாள் பிரதிச் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!

 முன்னாள் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைப்…

Read more