எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது!


 எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகப் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் கூறினார். தற்காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது சிரமமாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய கெமுனு விஜேரத்ன, முன்னைய பேருந்து கட்டணத் தேசிய கொள்கைக்கு அமைய, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது என்று தெரிவித்தார். எனினும், தற்போது அந்தத் தூரம் குறைவடைந்துள்ளதாகவும், இப்பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிவதாகவும் அவர் கூறினார். இதற்கமைய, பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 முதல் 6 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன: “இங்கு பெரியதொரு சிக்கல் உள்ளது. மிக விரைவில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்க நேரிடும். ஏனெனில், வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகவே பேருந்து கட்டண உயர்வு அவசியம் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. இலங்கையில் குறுகிய தூரப் பேருந்து சேவைகளே அதிகம் இயங்குகின்றன. இலங்கையில் 13,000 முதல் 14,000 வரையிலான பேருந்துகள் உள்ளன. இதில் சாதாரணமாக 6,000 முதல் 7,000 மேலதிக பேருந்துகள் உள்ளன. இப்போது கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து செய்வது சாத்தியமற்றதாகிவிட்டது. முன்பு பேருந்து கட்டணத் தேசிய கொள்கையில், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் ஓடக்கூடிய தூரம் 2.5 அல்லது 3 கி.மீ என்றே கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது அது மேலும் குறைந்து, 2 கி.மீ கூட ஓட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல். அரசாங்கம் வந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அரசாங்கம் என்ன செய்தது? அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு என்ன செய்தார்? அவர்களுடைய தலைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக மோசமான ஊழல்வாதிகள் என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறுகிறோம். பொதுப் போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் கட்டண உயர்வைக் கோருவோம். கடந்த காலம் முழுவதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஏனென்றால் பொதுப் போக்குவரத்து சேவை முற்றாகச் சீர்குலைந்துள்ளது. தனியார் பேருந்து சேவையை ஒழுங்குபடுத்துவது நாங்கள் அல்ல என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பேருந்து கட்டணம் குறித்து மீளாய்வு செய்யுமாறு நாங்கள் கோருகிறோம். ஏனெனில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. குறைந்தபட்சம் குறுகிய தூர சேவைகளுக்கு, ஆரம்பக் கட்டணத்தை 5 அல்லது 6 ரூபாவினால் அதிகரிக்க வேண்டியுள்ளது,” என்று தெரிவித்தார்.

Related Posts

இணுவை கந்தனுக்கு பால் அபிஷேகம் – மாலை உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளவுள்ள ஆறுமுகத்தான்! – Global Tamil News

தைப்பூச தினத்தினை முன்னிட்டு , இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பால் குட பவனி இடம்பெற்று ஆறுமுக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூச தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை…

Read more

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனா எடுத்த புதிய முயற்சி! – Global Tamil News

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நேரங்களில், அதிகாரபூர்வமாக கூடுதல் நெடுஞ்சாலை வழித்தடங்களை (extra highway lanes) திறந்து வாகனங்களைச் செலுத்த சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்கள், நீண்ட வார இறுதிகள் போன்ற நேரங்களில் உருவாகும் மிகுந்த வாகன…

Read more

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more