📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! – Global Tamil News


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 📊  குறைந்த வயதில்  கர்ப்பமடைதல்: 2024-ஆம் ஆண்டுடன் (53 பேர்) ஒப்பிடுகையில், 2025-இல் 18 வயதுக்குட்பட்ட 79 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது பாரிய அதிகரிப்பைக் காட்டுகிறது. கடந்த ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இது 2024-ஆம் ஆண்டுடன் (14 திருமணங்கள்) ஒப்பிடும்போது சற்று குறைவடைந்துள்ளது. நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி சிறுவர்களை அச்சுறுத்திய 150 வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் அக்டோபர் மாதத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 8,514 முறைப்பாடுகளும், ஏனையவை: 1,941 முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ⚠️ சமூகப் பிரச்சினைகளும் பாதிப்புகளும்: 545 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 231 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 627 சிறுவர்களுக்கு அவசர உளவியல் சமூக ஆதரவு அல்லது ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.116 சிறுவர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோர் கண்காணிப்பின்மை: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளிநாடு சென்ற சம்பவங்கள் 9 பதிவாகியுள்ளன. பிறப்புச் சான்றிதழ் இல்லாத 32 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 🛑 எச்சரிக்கை: நமது பிள்ளைகளின் இணையப் பயன்பாடு மற்றும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சிறுவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும் எதிராக குரல் கொடுப்போம்! #ChildProtection #SriLanka #NCPA #SaveTheChildren #Awareness #SriLankaNews #ChildAbuseAwareness #CyberSafety #ProtectOurFuture #TamilNews #சிறுவர்பாதுகாப்பு #இலங்கை

Related Posts

இன்றைய வானிலை !

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே…

Read more
பொலிஸ்-நிலையத்தில்-இருந்து-மகசீனுடன்-கைத்துப்பாக்கி-மாயம்-–-தீவிர-விசாரணையில்-பொலிஸார்

பொலிஸ் நிலையத்தில் இருந்து மகசீனுடன் கைத்துப்பாக்கி மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலிஸ் நிலையத்தில் இருந்து மகசீனுடன் கைத்துப்பாக்கி மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார் மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் 10 தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப சேவைப் பொறுப்பில் இருந்த கைத்துப்பாக்கியும், 10…

Read more

இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன்…

Read more
வடக்கு-கிழக்கில்-பறிபோகும்-தமிழர்-காணிகள்-–-அரசாங்கத்திற்கு-எதிர்ப்பை-பதிவு-செய்ய-ஒன்றிணையுங்கள்-!

வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் – அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய ஒன்றிணையுங்கள் !

தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

Read more
சுதந்திர-தினம்-கரிநாள்-–-பேரணிக்கு-வலுசேர்க்க-அழைப்பு

சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு

சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய…

Read more

விண்வெளியில் 'சூப்பர் கம்ப்யூட்டர்' சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்!  – Global Tamil News

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! எதற்காக இத்தனை செயற்கைக்கோள்கள் என்ற கேள்விகள்…

Read more