வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!


வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

Related Posts

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

Read more

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! – Global Tamil News

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த…

Read more