தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு


யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர். 

Related Posts

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

Read more

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! – Global Tamil News

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த…

Read more