தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கைதானவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது…


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு  என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் செய்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய,  716   சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நாடு முழுவதும் சுமார் 718சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த  பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்திருந்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன்,  போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 5 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு கடந்த  ஒக்டோபர் மாதம் 30 ஆம்  திகதியிலிருந்து  முன்னெடுக்கப்பட்டுவரும்  தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய  அமைய இதுவரை 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 84100 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 508 கிலோ கிராம் ஹெரோயின் 1401 கிலோ கிராம் ஐஸ், 2357  கிலோ கிராம் கஞ்சா, 174 கிலோ கிராம்  குஷ்,46 கிலோ கிராம் ஹசிஸ்,120  கிலோ கிராம்  மதனமோதகம், 156 மாவா, 11 கிலோ கிராம் கொக்கைன்  மற்றும் 143879 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் 82 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,1710 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.மேலும்  போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1503 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

பாலின மாற்ற சிகிச்சை  : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! – Global Tamil News

அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, நீதிமன்ற ஜூரி குழுவினர் 2 மில்லியன் டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர். பாலின…

Read more

🇨🇳 சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில்  -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம்  – Global Tamil News

சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் அமெரிக்காவின் தலையீடுகளைத் தொடர்ந்து,…

Read more
தையிட்டி-விகாரைக்கு-எதிராக-கொட்டும்-மழைக்குள்ளும்-போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய…

Read more

ரணில் மீதான விசாரணை சட்டப்படிதான் நடக்கிறது…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது…

Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படாது! ஆனால்…

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15,000 பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறை திணைக்களங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். திணைக்களத்தின் மொத்தமுள்ள…

Read more
தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more