கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்!

கரிநாள்-போராட்டத்தில்-சகல-மக்களும்-திரள-வேண்டும்!


இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.மேலும் தெரிவித்ததாவது:-“இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாபெரும் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டங்கள் தொடர்பாக மாணவர்கள் எம்மைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளோம்.மேலும், மட்டக்களப்பிலும் கிளிநொச்சியிலும் மட்டுமல்லாது, தமிழர் தாயகம் எங்கும் அன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.எனவே, மக்கள் அனைவரும் மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சிக்கு அணிதிரண்டு சென்று கரிநாள் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.தமிழின இருப்பை அழிக்கும் ஒற்றையாட்சி முறைமையை அடியோடு நிராகரித்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை எட்டும் வரையில் கரிநாள் என்ற செய்தியை நிரூபிக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி ஒன்றுதிரள வேண்டியது அவசியமாகும்.இந்த அரசு தமிழ் மக்களுக்கு நல்லதைச் செய்வதாகக் கூறிக்கொண்டாலும், தொடர்ச்சியாக இனவாத ரீதியில் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ் மக்கள் தொடர்பில் கடந்த கால அரசுகள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதேபோன்று இன்றைய அரசும் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.

Related Posts

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

Read more

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! – Global Tamil News

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த…

Read more