இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை? : முன்மொழிவு கையளிப்பு


இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க, இதற்கான சட்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்குச் சற்று கால அவகாசம் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்ப கால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய மூன்று நிறுவனங்களின் ஆலோசனைகள் அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமால் சுதர்சன, இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றார். இலங்கை சமூக மருத்துவ நிபுணர்கள் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, கட்டுப்பாடற்ற சமூக வலைத்தள பயன்பாடு சிறுவர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் தோற்றம் குறித்த அதிருப்தி. இணையவழி துன்புறுத்தல், வன்முறை மற்றும் தவறான உள்ளடக்கங்களை எதிர்கொள்ளுதல். 8-12 வயதுடைய சிறுவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 5 மணிநேரமும், இளைஞர்கள் 7 மணிநேரமும் திரைகளுக்கு முன்னால் செலவிடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைத் தடுப்பது இதன் நோக்கமல்ல. மாறாக, சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் இலக்கு என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்காக வலுவான வயது சரிபார்ப்பு முறைகள் (Age verification) மற்றும் தரவு பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts

ஷிரந்தி ராஜபக்ஷ FCIDக்கு, நாமல் ராஜபக்ஷ CIDக்கு ஒரே திகதியில் அழைப்பு

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல்…

Read more

உலகின் முதல் ‘Gold Street’ – டுபாயில் அதிகாரப்பூர்வ திறப்பு! – Global Tamil News

தங்கம் மற்றும் ஆபரண வணிகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ‘Gold Street’-ஐ டுபாய் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய தங்க வர்த்தகத்தின் முக்கிய மையமாக விளங்கும் துபாய், இந்த புதிய முயற்சியின் மூலம் தங்கம்–ஆபரணத் துறையில் தனது முன்னணித் தன்மையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது….

Read more

வடக்கு கிழக்கில் 4ஆம் திகதி வரை மழை தொடரும் – Global Tamil News

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது…

Read more

புத்தர் சிலை திருட்டு: 14 பேர் கைது

மாவத்தகம – கஹபத்வல, கெபிலிதிகொட புராண ரஜமஹா விகாரையின் தேரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 28ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக மாவத்தகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த…

Read more

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – Global Tamil News

மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர், சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,…

Read more

அமெரிக்காவை விட 3 மடங்கு வேகம்: சீனாவின் மின் உற்பத்தியைக் கண்டு வியந்த எலோன் மஸ்க்! – Global Tamil News

சீனாவின் மின் உற்பத்தி திறன் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், குறிப்பாக சூரிய சக்தி (Solar Energy) உற்பத்தியில் சீனா உலக நாடுகளுக்கே சவாலாக விளங்குவதாகவும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் அதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். சீனாவின் ஒட்டுமொத்த…

Read more