“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உடனடியாக மீட்டெடுக்க 10 அதிநவீன பெய்லி பாலங்கis(Bailey Bridges) அனுப்பி வைத்துள்ளது இந்த உதவி, இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ள 450 மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பாலங்கள் எளிதில் பொருத்தக்கூடியவை என்பதால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். முதற்கட்டமாக, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இந்தப் பாலங்கள் பொருத்தப்படவுள்ளன. இரத்தினபுரியில் அதிகளவான சிறிய மற்றும் நடுத்தர பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதனால் முன்னுாிமை வழங்கப்படும் அதேபோன்று தென்னிலங்கையின் உட்பிரதேச கிராமங்களுக்கான காலி மற்றும் மாத்தறை ஆகியவற்றில் இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்த இவை உதவும். வடக்கு மாகாணத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வீதிகளைச் சீரமைக்க இவை பயன்படுத்தப்படும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய தரவுகளின்படி டித்வா (Tidva) புயலினால் 45-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பாலங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.120-க்கும் மேற்பட்ட வீதிப் போக்குவரத்து வழிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்குப் பாரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 பெய்லி பாலங்கள், இந்தியா அறிவித்துள்ள 450 மில்லியன் டொலர் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் எரிபொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான உதவிகளும் உள்ளடங்கியுள்ளன. Tag Words: #IndiaSriLanka #BaileyBridges #CycloneTidva #DisasterRelief #LKA #EconomicPackage #InfrastructureRepair #RandhirJaiswal #NeighbourhoodFirst #BreakingNews2026