இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


 செ.சுபதர்ஷனி)வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள்  நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது.அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது.  இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர்.அத்தோடு வாட்ஸ்அப்  செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர்.ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.  மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

சங்கானை-இராணுவ-முகாமை-அகற்ற-கோரிக்கை!

சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா தெரிவித்துள்ளார் அது தொடர்பில் மேலும்…

Read more
கைபேசி-பயன்பாடு-–-தந்தை-தாக்கியதில்-மகள்-உயிரிழப்பு

கைபேசி பயன்பாடு – தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு

காலி – உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார்.தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய…

Read more
யாழில்.-வளர்ப்பு-நாயை-கட்டுப்பாடின்றி-வீதியில்-விட்டவருக்கு-நீதிமன்று-கடுமையான-எச்சரிக்கை

யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை

தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் பாதசாரிகளிற்கும்…

Read more

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் தீ பரவல்!

பண்டாரகமை – களுத்துறை வீதியில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 01.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹொரணை நகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து…

Read more

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்

 இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக  தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் …

Read more

20 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு

 கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,032,804 வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (30) அழிக்கப்பட்டன. இலங்கை சுங்கப்பிரிவின் ஏற்பாட்டில், கெரவலப்பிட்டிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இவை அழிக்கப்பட்டன. இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் சந்தை பெறுமதி…

Read more