by admin January 31, 2026 written by admin January 31, 2026 நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய தேவஸ்தானத்திற்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். இவ்வழிபாட்டு முறை நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது. இப்புதிர் விழா 292ஆவது ஆண்டாக இவ்வருடமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. Related News