தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் தீ பரவல்!


பண்டாரகமை – களுத்துறை வீதியில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 01.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹொரணை நகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ பரவலினால் ஏற்பட்ட சேதம் காரணமாக குறித்த தொழிற்சாலைக்கு சுமார் 20 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எவ்வாறிருப்பினும், தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Posts

சங்கானை-இராணுவ-முகாமை-அகற்ற-கோரிக்கை!

சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா தெரிவித்துள்ளார் அது தொடர்பில் மேலும்…

Read more
கைபேசி-பயன்பாடு-–-தந்தை-தாக்கியதில்-மகள்-உயிரிழப்பு

கைபேசி பயன்பாடு – தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு

காலி – உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார்.தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய…

Read more
யாழில்.-வளர்ப்பு-நாயை-கட்டுப்பாடின்றி-வீதியில்-விட்டவருக்கு-நீதிமன்று-கடுமையான-எச்சரிக்கை

யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை

தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் பாதசாரிகளிற்கும்…

Read more

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்

 இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக  தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் …

Read more

20 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு

 கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,032,804 வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (30) அழிக்கப்பட்டன. இலங்கை சுங்கப்பிரிவின் ஏற்பாட்டில், கெரவலப்பிட்டிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இவை அழிக்கப்பட்டன. இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் சந்தை பெறுமதி…

Read more

உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை !

Saturday, January 31, 2026 உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை !  உண்ணாவிரதம் இருந்து எவரும் இறப்பதில்லை எனவும் அவ்வாறு இறந்தாலும் தாம் அதற்கு பொறுப்பாக முடியாது எனவும் NPP பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி குறிப்பிட்டார்.இலங்கை வரலாற்றில் வடக்கில் தமிழர்…

Read more