இலங்கையின் பௌத்த சாசனம் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால், தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு, நாமலை ஜனாதிபதியாக்குவதே ஒரே வழி என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அநுர அரசாங்கம் பௌத்த சாசனத்தின் மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருவதாகவும், இதனைத் தடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். வாக்குகள் குறையும் என்று தெரிந்தும், நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என பகிரங்கமாக உறுதியளித்த ஒரே வேட்பாளர் நாமல் ராஜபக்ச மட்டுமே. அதனால் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் மட்டுமே மகா சங்கத்தினருக்குரிய (பௌத்த பிக்குகளுக்குரிய) கௌரவம் மீளக் கிடைக்கும் என வீரசேகர வலியுறுத்தியுள்ளார். “எனது நாட்டின் சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டும். அந்த உத்தரவாதத்தை வழங்கிய ஒரே தலைவர் நாமல் ராஜபக்சவே.” என சரத் வீரசேகர வலியுறுத்தி உள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாமல் ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த முன்னுரிமை குறித்துப் பேசியிருந்தார். தற்போதுள்ள அரசியல் சூழலில், பழைய ராஜபக்ச ஆதரவாளர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #SriLanka #PoliticsSL #NamalRajapaksa #SarathWeerasekara #AnuraKumara #BuddhistSasana #LKA #UnitaryState #NewsUpdate #இலங்கை #அரசியல் #நாமலிராஜபக்ஷ #சரத்வீரசேகர