👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்! – Global Tamil News


தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிக்  காவல்துறை மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம் காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி காவல்துறை மா அதிபர் எச்.சி.ஏ. புஷ்பகுமார காலி பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.எச்.ஈ.எல். பெரேரா கம்பளைப் பிரிவிலிருந்து கொழும்பு வடக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.என். குணவர்தன மொனராகலைப் பிரிவிலிருந்து காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பி.ஏ.ஆர். புஷ்பகுமார கொழும்பு வடக்கு பிரிவிலிருந்து விசேட விமான நிலையப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்க காவல்துறை தலைமையகத்தின் மேலதிக தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இருந்து, மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கண்டி காவல்துறை அத்தியட்சகராகக் கடமையாற்றிய பி.டி. இலங்ககோன் கம்பளைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. Tag Words:#SriLankaPolice #PoliceTransfers #DIG #SSP #NationalPoliceCommission #LKA #BreakingNews2026 #PoliceNews #AdministrativeChanges #SecurityUpdate

Related Posts

காங்கோவில்-கோல்டன்-சுரங்கத்தில்-ஏற்பட்ட-நிலச்சரிவில்-227க்கும்-மேற்பட்டோர்-உயிரிழப்பு

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண…

Read more

🌉  இந்தியாவிடமிருந்து  இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள்  – Global Tamil News

“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உடனடியாக மீட்டெடுக்க 10 அதிநவீன பெய்லி பாலங்கis(Bailey Bridges) அனுப்பி வைத்துள்ளது இந்த உதவி, இந்தியா இலங்கைக்கு…

Read more
ஈரான்-பந்தர்-அப்பாஸ்-துறைமுகத்தில்-குண்டு-வெடிப்பு

ஈரான் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் குண்டு வெடிப்பு

ஈரானிய நகரமான பந்தர் அப்பாஸில் நடந்ததாகக் கூறப்படும் குண்டுவெடிப்பு, அமெரிக்கா- ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.நகரின் மோலெம் பவுல்வர்டு பகுதியில் எட்டு மாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும், இரண்டு தளங்கள், பல வாகனங்கள்…

Read more

🛡️ இஸ்ரேல் – சவுதிக்கு பாரிய ஆயுத விற்பனை  – அமெரிக்கா பச்சைக்கொடி – Global Tamil News

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது…

Read more
மாவையின்-பின்னால்-புதிய-பாதை!

மாவையின் பின்னால் புதிய பாதை!

மாவையின் பின்னால் புதிய பாதை! புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.மறைந்த மாவையின் நினைவேந்தலில் வடக்கு கிழக்கு…

Read more
4ம்-திகதி-கரிநாள்:வலுக்கும்-ஆதரவு!

4ம் திகதி கரிநாள்:வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்  அறிவித்துள்ளார்.எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு…

Read more