பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது


 பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து, வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று பேருவலை, மருதான பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் களுத்துறை அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறிய அளவிலான மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்களை மீனவர்கள் பிடிப்பதால், கடலில் சிங்கி இறால்களின் இனப்பெருக்கம் பெருமளவில் குறைவடைவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Posts

தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்

 எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை…

Read more

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை…

Read more

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Saturday, January 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! Zameera   January 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர்…

Read more

🕊️ யுக்ரைன்  மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்! – Global Tamil News

யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த (Ceasefire) ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது….

Read more

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: – Global Tamil News

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில்…

Read more
யாழில்.-மாவைக்கு-சிலை-திறப்பு

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில்…

Read more