🚨 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி: ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க் கைது! 🚨 – Global Tamil News


அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை (ED) இன்று கைது செய்துள்ளது. 📍 மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) ஏற்கனவே பதிவு செய்திருந்த FIR-ன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட புனித் கார்க்கை, 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 🔍 வங்கிகளில் பெறப்பட்ட பொதுமக்களைச் சேர்ந்த சுமார் ரூ.40,000 கோடி கடனை, வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் விலை உயர்ந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதும், பின்னர் அதை ரகசியமாக விற்று பணத்தை மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தை (வங்கி கடன்) தனது குழந்தைகளின் வெளிநாட்டுக் கல்விச் செலவு உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சொத்து விற்பனை மூலம் கிடைத்த பணத்தை துபாயைச் சேர்ந்த நபர் (பாகிஸ்தான் தொடர்பு உடையவர் எனச் சொல்லப்படுகிறது) மூலம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. 📈 இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய சுமார் ரூ.12,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. இதில் புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளும் அடங்கும். இந்த கைது நடவடிக்கை அனில் அம்பானி குழுமத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக குழுமத்தின் மற்ற உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #PuneetGarg #RelianceGroup #AnilAmbani #EnforcementDirectorate #BankFraud #MoneyLaundering #RCOM #FinancialNews #BreakingNews #EDArrest #BankingScam #TamilNews

Related Posts

சங்கானை-இராணுவ-முகாமை-அகற்ற-கோரிக்கை!

சங்கானை இராணுவ முகாமை அகற்ற கோரிக்கை!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும் , அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா தெரிவித்துள்ளார் அது தொடர்பில் மேலும்…

Read more
கைபேசி-பயன்பாடு-–-தந்தை-தாக்கியதில்-மகள்-உயிரிழப்பு

கைபேசி பயன்பாடு – தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு

காலி – உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார்.தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய…

Read more
யாழில்.-வளர்ப்பு-நாயை-கட்டுப்பாடின்றி-வீதியில்-விட்டவருக்கு-நீதிமன்று-கடுமையான-எச்சரிக்கை

யாழில். வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்று கடுமையான எச்சரிக்கை

தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் பாதசாரிகளிற்கும்…

Read more

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் தீ பரவல்!

பண்டாரகமை – களுத்துறை வீதியில் உள்ள தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 01.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹொரணை நகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து…

Read more

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்

 இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக  தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் …

Read more

20 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு

 கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,032,804 வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று (30) அழிக்கப்பட்டன. இலங்கை சுங்கப்பிரிவின் ஏற்பாட்டில், கெரவலப்பிட்டிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இவை அழிக்கப்பட்டன. இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் சந்தை பெறுமதி…

Read more