அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் (Sabina Yusuf) மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (ஜனவரி 30, வெள்ளிக்கிழமை) காலை கலிபோர்னியாவில் இந்த இறுதிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. போட்டியில் முதலிடத்தினை தாய்லாந்து (Thailand) நாட்டைச் சோ்ந்தவரும் இரண்டாம் இடத்தினை நடத்திய நாடான அமெரிக்காவினைச் (USA) சோ்ந்தவரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த 41-வது போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகிகள் கலந்துகொண்டனர். சபீனா யூசுப் இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானது, சர்வதேச அழகிப் போட்டி மேடைகளில் இலங்கை பெண்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகின்றது அவரது உடை அலங்காரம் மற்றும் நேர்காணல் சுற்றுகளில் வெளிப்படுத்திய புத்திசாலித்தனம் நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இலங்கை உலக அழகிப் போட்டிகளில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ரோசி சேனநாயக்க 1984 இல் முதலாவது ‘உலகத் திருமதி’ (Mrs. World) போட்டியில் மகுடம் சூடி, இலங்கைக்கு முதல் சர்வதேச அழகிப் பட்டத்தைப் பெற்றுத்தந்தார். கரோலின் ஜூரி நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு உலகத் திருமதி பட்டத்தை வென்று இலங்கையை மீண்டும் உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தார். புஷ்பிகா டி சில்வா 2021 இல் இறுதிப் போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் தெரிவாகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சபீனா யூசுப்பின் இந்த 2026 ஆம் ஆண்டு வெற்றி, 60 நாடுகளுக்கு மத்தியில் இலங்கையின் அழகையும் ஆளுமையையும் மீண்டும் நிலைநாட்டியுள்ளது. Tag Words: #MrsWorld2026 #SabinaYusuf #SriLankaProud #BeautyPageant #Thailand #USA #GlobalVictory #LKA #BreakingNews2026 #EmpoweredWomen