🏆 தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு:  – Global Tamil News


தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதுகள், கலைத்துறையினரிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொடர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த நடிகர்களாக வெவ்வேறு ஆண்டுகளுக்காக மாதவன் (விக்ரம் வேதா), விஜய் சேதுபதி (96), சூர்யா (சூரரைப் போற்று), சிலம்பரசன் TR (மாநாடு) மற்றும் ஆர்யா (சார்பட்டா பரம்பரை) போன்றோர் விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் முன்னணி வகிக்கின்றனர். சிறந்த திரைப்படங்களாக ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய் பீம்’, ‘கடைசி விவசாயி’ போன்ற சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் தொிவுசெய்யப்பட்டுளளன. அதேபோன்று சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடா்கள் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன சின்னத்திரையைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன: சிறந்த தொடர்களாக ‘வாணி ராணி’, ‘தெய்வமகள்’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’, ‘எதிர்நீச்சல்’ போன்ற தொடர்கள் வெவ்வேறு ஆண்டுகளுக்காக விருதுகளை வென்றுள்ளன. சிறந்த நடிகர்களாக கிருஷ்ணா, சஞ்சீவ், ஆல்யா மானசா, ராதிகா சரத்குமார் போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த நடிகர்/நடிகை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுப் பட்டியலில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம், மூன்றாம் பரிசு ₹75 ஆயிரம், சிறப்புப் பரிசு ₹75 ஆயிரம். பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்புப் பரிசு ₹1.25 லட்சம். நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசும் வழங்கப்படும். அதேபோன்றுசின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம். ஆண்டின் சிறந்த சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளருக்கு தலா ₹1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். Tag Words: #TamilNaduStateAwards #FilmAwards2026 #TNAwards #Kollywood #VijaySethupathi #Suriya #TamilSerial #BreakingNews2026 #LKA #CinemaExcellence

Related Posts

ஒரு-வாரத்திற்குப்-புடின்-உக்ரைனைத்-தாக்க-மாட்டார்-–-டிரம்ப்-தெரிவிப்பு

ஒரு வாரத்திற்குப் புடின் உக்ரைனைத் தாக்க மாட்டார் – டிரம்ப் தெரிவிப்பு

கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனின் வோலோடிமிர்…

Read more
உக்ரைனின்-மூன்று-கிராமங்களைக்-கைப்பற்றியது-ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள ரிச்னே மற்றும் டெர்னுவேட்…

Read more
பெலுகாஸ்ட்-விமானம்-இறுதி-தரையிறக்கத்தை-மேற்கொண்டது!

பெலுகாஸ்ட் விமானம் இறுதி தரையிறக்கத்தை மேற்கொண்டது!

புகழ்பெற்ற ‘சூப்பர் ஜம்போ’ பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது.உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏர்பஸ் பெலுகாஸ்ட் விமானம், இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.அந்த விமானம் GMT நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு…

Read more

டொரிலிருந்து விலகும் உலகம்-தங்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம்! – Global Tamil News

உலகளாவிய நிதி அமைப்பில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் (Global Shift) நடைபெற்று வருகிறது. அமெரிக்க டொலரை மையமாக வைத்த கையிருப்பு அமைப்பிலிருந்து பல நாடுகள் மெதுவாக விலகி, தங்கம் போன்ற கடின சொத்துகளுக்கு (Hard Assets) மாறி வருகின்றன. இதன்…

Read more

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி! – Global Tamil News

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை  பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி…

Read more

⚖️  வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம் – Global Tamil News

அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக 941,000 டாலர் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்)…

Read more