இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் காரணமாக, கொழும்பு நகரில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒத்திகை நாட்கள் மற்றும் நேரங்கள்:சுதந்திர தின ஒத்திகைகள் நடைபெறும் கீழ்க்கண்ட நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 02: காலை 7.45 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.பெப்ரவரி 01: அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று:பெப்ரவரி 4-ம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை சுதந்திர சதுக்கத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பகுதிகள்:சுதந்திர சதுக்கத்தை (Independence Square) சூழவுள்ள பிரதான வீதிகளில் இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. எனவே, இந்த நேரப்பகுதிகளில் கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.