டொரிலிருந்து விலகும் உலகம்-தங்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம்! – Global Tamil News


உலகளாவிய நிதி அமைப்பில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் (Global Shift) நடைபெற்று வருகிறது. அமெரிக்க டொலரை மையமாக வைத்த கையிருப்பு அமைப்பிலிருந்து பல நாடுகள் மெதுவாக விலகி, தங்கம் போன்ற கடின சொத்துகளுக்கு (Hard Assets) மாறி வருகின்றன. இதன் மிகத் தெளிவான எடுத்துக்காட்டாக சீனா உள்ளது. சீனாவின் தங்க கையிருப்பு சீனாவின் தங்க கையிருப்பு தற்போது 74 மில்லியன் அவுன்ஸ் – இதுவரை இல்லாத வரலாற்று உச்சம் அதே நேரத்தில், சீனாவின் அமெரிக்க கருவூல (டிரஷரி) பத்திரங்கள் (US Treasuries) கையிருப்பு சுமார் $682 பில்லியன் ஆக குறைந்துள்ளது இது கடந்த இரு தசாப்தங்களில் மிகக் குறைந்த அளவு 2013-ல் இருந்த உச்ச நிலையிலிருந்து, சீனா $600 பில்லியனுக்கும் அதிகமான US Treasuries-ஐ குறைத்துள்ளதுஅதே காலகட்டத்தில், தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துள்ளது. இது ஒரே நேரத்தில் டொலரை ‘தள்ளிவிடும்’ நடவடிக்கையல்ல. மாறாக, நீண்டகால மூலோபாய மாற்றம் –டொலர் சார்ந்த கையிருப்பிலிருந்து தங்கம் போன்ற மதிப்பை இழக்காத சொத்துகளுக்கு நகரும் திட்டமிட்ட பயணம். அமெரிக்க டொலரின் மதிப்பு அழுத்தத்தில்- உலக அரசியல் பதற்றங்கள், அமெரிக்க கடன் சுமை, வட்டி விகித நிச்சயமற்ற நிலை டொலர் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் BRICS நாடுகளின் முயற்சிகள்ெ இந்த பின்னணியில், பாதுகாப்பான சொத்து (Safe Haven Asset) என்ற அடையாளம் மீண்டும் தங்கத்துக்கே திரும்பியுள்ளது. டொலர் பலவீனமடையும் இந்த சூழலில்,ெ தங்கத்தின் விலை புதிய உச்சங்களை எட்டும் காலம் அருகிலேயே உள்ளது என்ற எதிர்பார்ப்பு நிதி சந்தைகளில் வலுப்பெற்று வருகிறது. உங்களின் கருத்து என்ன? தங்கம் இனி வரும் காலங்களில் $5000 அல்லது $6000 அவுன்ஸ் என்ற அளவைத் தொடுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! ________________________________________

Related Posts

ஒரு-வாரத்திற்குப்-புடின்-உக்ரைனைத்-தாக்க-மாட்டார்-–-டிரம்ப்-தெரிவிப்பு

ஒரு வாரத்திற்குப் புடின் உக்ரைனைத் தாக்க மாட்டார் – டிரம்ப் தெரிவிப்பு

கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனின் வோலோடிமிர்…

Read more
உக்ரைனின்-மூன்று-கிராமங்களைக்-கைப்பற்றியது-ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள ரிச்னே மற்றும் டெர்னுவேட்…

Read more
பெலுகாஸ்ட்-விமானம்-இறுதி-தரையிறக்கத்தை-மேற்கொண்டது!

பெலுகாஸ்ட் விமானம் இறுதி தரையிறக்கத்தை மேற்கொண்டது!

புகழ்பெற்ற ‘சூப்பர் ஜம்போ’ பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது.உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏர்பஸ் பெலுகாஸ்ட் விமானம், இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.அந்த விமானம் GMT நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு…

Read more

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி! – Global Tamil News

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை  பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி…

Read more

⚖️  வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம் – Global Tamil News

அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக 941,000 டாலர் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்)…

Read more

சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்! – Global Tamil News

சீனாவுடன் இங்கிலாந்து (UK) வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். “UK சீனாவுடன் வியாபாரம் செய்வது மிக ஆபத்தானது. ஆனால் அதைவிடவும் கனடா சீனாவுடன் வியாபாரம் செய்வது இன்னும்…

Read more