அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்


(இணையத்தள செய்தி பிரிவு)சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அரசியல் அழுத்தமாக அமைந்தது.போராட்டத்தின் போது, “அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்றும், “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும் போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் முழக்கமிட்டனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட் தந்தை சக்திவேல், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக NPP அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து, அவர்களினால் தற்போது கொண்டுவரப்படும் PSTA சட்டமூலமானது பழைய PTA சட்டத்தை விடவும் ஆபத்தானது என்று குற்றம் சாட்டினார்.இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் கைகோர்த்து நின்றமை, இந்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தியது.போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது தனிப்பட்ட வலிகளையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர். 2009ஆம் ஆண்டு மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ‘முகமது ஹக்கிம்’ என்ற இளைஞனின் தாயார், தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கோரி ஏந்தியிருந்த பதாகை காண்போரை நெகிழச் செய்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள PTA சட்டமானது சிறுபான்மையினருக்கும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், புதிய பெயரில் மீண்டும் ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். நீதி அமைச்சிற்கு முன்னால் திரண்டிருந்த மக்கள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் முடக்கும் இத்தகைய சட்டமுயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Related Posts

சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்! – Global Tamil News

சீனாவுடன் இங்கிலாந்து (UK) வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். “UK சீனாவுடன் வியாபாரம் செய்வது மிக ஆபத்தானது. ஆனால் அதைவிடவும் கனடா சீனாவுடன் வியாபாரம் செய்வது இன்னும்…

Read more

ஈரான்மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலிலும் பிரித்தானியா  (UK) பங்கேற்காது! – Global Tamil News

ஈரான்மீது அமெரிக்கா முன்னெடுக்கக்கூடிய இராணுவ தாக்குதலில் இங்கிலாந்து இணைவதில்லை என்று பிரித்தானிய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என்பதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் லண்டன் கருதுகிறது. அதனால்,…

Read more

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை

 பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு…

Read more

🏆 தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு:  – Global Tamil News

தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதுகள், கலைத்துறையினரிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Read more

🎬  விபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குக் காயம்! – Global Tamil News

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, ஒரு முக்கிய சண்டைக் காட்சியைப் (Action Sequence) படமாக்கும்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் அல்லது ஒரு சவாலான சண்டைக் காட்சியில் விஜய் சேதுபதி டூப் (Body Double) போடாமல் தானே நடித்தபோது இந்த…

Read more

⚖️ திருகோணமலை புத்தர் சிலை   வழக்கின் தீா்ப்பு  ஒத்திவைப்பு! – Global Tamil News

திருகோணமலை நகரின் மையப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் (ஜனவரி 30)…

Read more