அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்


(இணையத்தள செய்தி பிரிவு)சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அரசியல் அழுத்தமாக அமைந்தது.போராட்டத்தின் போது, “அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்றும், “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும் போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் முழக்கமிட்டனர்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட் தந்தை சக்திவேல், ‘ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக NPP அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை மறந்து, அவர்களினால் தற்போது கொண்டுவரப்படும் PSTA சட்டமூலமானது பழைய PTA சட்டத்தை விடவும் ஆபத்தானது என்று குற்றம் சாட்டினார்.இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் கைகோர்த்து நின்றமை, இந்தச் சட்டங்களுக்கு எதிராக நிலவும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தியது.போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது தனிப்பட்ட வலிகளையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர். 2009ஆம் ஆண்டு மட்டக்குளிப் பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ‘முகமது ஹக்கிம்’ என்ற இளைஞனின் தாயார், தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கோரி ஏந்தியிருந்த பதாகை காண்போரை நெகிழச் செய்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள PTA சட்டமானது சிறுபான்மையினருக்கும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், புதிய பெயரில் மீண்டும் ஒரு கருப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். நீதி அமைச்சிற்கு முன்னால் திரண்டிருந்த மக்கள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் முடக்கும் இத்தகைய சட்டமுயற்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Related Posts

சிரியாவில்-குர்திஷ்-படைகளும்-மற்றும்-அரசாங்கமும்-ஒருங்கிணைப்பு-ஒப்பந்தத்தில்-உடன்பட்டன

சிரியாவில் குர்திஷ் படைகளும் மற்றும் அரசாங்கமும் ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் உடன்பட்டன

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) வெள்ளிக்கிழமை ஒரு விரிவான போர்நிறுத்தத்திற்கும், இராணுவ மற்றும் நிர்வாக அமைப்புகளை சிரிய அரசில் படிப்படியாக ஒருங்கிணைப்பதற்கும் ஒப்புக்கொண்டதாக அறிவித்தன .இந்த ஒப்பந்தத்தை சிரிய அரசாங்கம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.வடகிழக்கு சிரியாவில் ஒரு…

Read more
திருமணமாகாத-தம்பதியினர்-உடலுறவு-மற்றும்-மது-அருந்தியமைக்காக-140-முறை-பிரம்படி

திருமணமாகாத தம்பதியினர் உடலுறவு மற்றும் மது அருந்தியமைக்காக 140 முறை பிரம்படி

இந்தோனேசியாவில் திருமணமாகாத தம்பதியினர் வெளியே உடலுறவு கொண்டதற்காகவும், மது அருந்தியதற்காகவும் 140 முறை பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இச்செயல் ஷரியா அல்லது இஸ்லாமிய மதச் சட்டத்தை மீறுகிறது.அச்சே மாகாணத்தில் நடந்த பொது இடங்களில் பிரம்படி தண்டனையாக பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள்…

Read more

60 சதவீத சாரதிகள் போதைக்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

Read more
ஒரு-வாரத்திற்குப்-புடின்-உக்ரைனைத்-தாக்க-மாட்டார்-–-டிரம்ப்-தெரிவிப்பு

ஒரு வாரத்திற்குப் புடின் உக்ரைனைத் தாக்க மாட்டார் – டிரம்ப் தெரிவிப்பு

கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனின் வோலோடிமிர்…

Read more
உக்ரைனின்-மூன்று-கிராமங்களைக்-கைப்பற்றியது-ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள ரிச்னே மற்றும் டெர்னுவேட்…

Read more
பெலுகாஸ்ட்-விமானம்-இறுதி-தரையிறக்கத்தை-மேற்கொண்டது!

பெலுகாஸ்ட் விமானம் இறுதி தரையிறக்கத்தை மேற்கொண்டது!

புகழ்பெற்ற ‘சூப்பர் ஜம்போ’ பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது.உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏர்பஸ் பெலுகாஸ்ட் விமானம், இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.அந்த விமானம் GMT நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு…

Read more