மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தனது இருப்பிடத்தை ரகசியமாக வைக்கும் பொருட்டு Transponder-களை அணைத்துவிட்டு (Going Dark) பயணப்படுபதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எதிரி நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவும் இந்தக் கப்பல் தகவல் தொடர்புகளைக் குறைத்துவிட்டு ‘டார்க் மோடில்’ இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மத்திய கிழக்கு கடற்பரப்பில் (CENTCOM) நுழைந்துள்ள இந்த கப்பல் குழுவில், பல அழிப்பு ரகக் கப்பல்கள் (Destroyers) மற்றும் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன. ஈரானில் நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அந்நாட்டின் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. “எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என அமெரிக்கத் தரப்பு எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நகர்வு, ஈரானுக்கு எதிரான ஒரு நேரடி ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதைக் காட்டுகிறதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. #USSAbrahamLincoln #USNavy #IranTensions #MiddleEastCrisis #WorldNews #MilitaryUpdate #USSIranConflict #Geopolitics #WarAlert #DefenseNews #TamilNews #அமெரிக்கா #ஈரான் #போர்_பதற்றம்