புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்!


2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம் திகதியிடப்பட்ட 2472/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் செயலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கட்சி அங்கீகரிக்கப்படுமிடத்து, 2026.01.13 ஆம் திகதியிடப்பட்ட 2471/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட (ஆ) அட்டவணையில் உள்ள கட்சிச் சின்னங்களில், அந்தக் கட்சிக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் சின்னத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கு மேலதிகமாக கட்சியின் யாப்பு, உத்தியோகத்தர் குழாம் பட்டியல், கடந்த நான்கு வருடங்களுக்கான பெண் உத்தியோகத்தர்களின் பெயர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு முன்னரான நான்கு வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கைகள், கட்சியின் தற்போதைய கொள்கைப் பிரகடனம் மற்றும் அரசியல் கட்சியொன்றாகக் குறைந்தது கடந்த நான்கு வருடங்களாவது தொடர்ச்சியாகச் செயற்பட்டதை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அனைத்து ஆவணங்களையும் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவற்றை, உரிய கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பதிவுத் தபாலில் அனுப்புவதன் மூலமோ அல்லது நேரடியாக வருகை தந்து கையளிப்பதன் மூலமோ சமர்ப்பிக்க முடியும். குறித்த விண்ணப்பங்களை அனுப்பும்போது, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026′ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய என்ற முகவரிக்கு அனுப்புமாறும் அல்லது அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிக்குமாறும் அவர்கள் அறிவித்துள்ளனர். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூலை மாதம் !

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத…

Read more

🛑 ஈரானின் IRGC பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு! ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு:  🌍🚫 – Global Tamil News

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் தற்போது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. ⚖️ பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாட்டில் தற்பொது மாற்றம் ஏற்பட்டுள்ளது….

Read more

வடஇந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா – Global Tamil News

யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார். முதன்முதலில் பாடசாலைக்கு காலடி எடுத்துவைக்கும் நாள் மாணவர்களின் நினைவில்…

Read more

⚖️ காந்தாரா படத்தைக் கேலி செய்ததாக   ரன்வீர் சிங் மீது வழக்கு: – Global Tamil News

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடவுள் நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களை…

Read more

டிரம்பிற்கு வந்த சோதனை – அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் (25th Amendment) கீழ் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். 📌  சமீபகாலமாக அதிபர் டிரம்பின் சில அதிரடி முடிவுகள் மற்றும் நிர்வாகக் செயல்பாடுகள் குறித்து…

Read more

⚖️ பாதிரியார் மீது  தாக்குதல்  –  6 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பிணை! – Global Tamil News

கம்பஹா பகுதியில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் நீதிமன்றம் இன்று (ஜனவரி 29, 2026) நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சந்தேகநபர்களுக்கு…

Read more