எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது


 எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதுமே அரசாங்கத்தின் நம்பிக்கை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பிள்ளையினதும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்களை மிகவும் முக்கியமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், பாடசாலைப் பருவத்தை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் சுதந்திரமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு பாடசாலைச் சூழலையும், கற்றல் – கற்பித்தல் செயல்முறையையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு நாம் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம். நீங்கள் சுமந்து வரும் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நாம் முயற்சிப்பது, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களில் எவ்விதக் குறைபாடும் ஏற்படாத வகையில், எதிர்கால உலகிற்குப் பொருத்தமானவர்களாக உங்களை ஒரு முழுமையான பிரஜையாக உருவாக்குவதற்காகவே ஆகும். அன்புக்குரிய பெற்றோர்களே, ஒரு வளமான நாட்டில் உங்கள் பிள்ளைக்கு ஒரு வளமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, அவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலையைக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்பதும், எந்தவொரு பிள்ளையும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். எமது இந்த நேர்மையான முயற்சியை வெற்றிகொள்வதற்கு உங்கள் அனைவரதும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை என நாம் கருதுகிறோம். நெகிழ்வுத்தன்மை மிக்க சிநேகபூர்வமான அணுகுமுறையுடன் அந்த நேர்மறையான வழிகாட்டல்களையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு, ஓடி ஆடி விளையாடியவாறு வளரும் உங்கள் பிள்ளைகளின் அனுபவங்களைச் செயல்திறன் மிக்க, அர்த்தமுள்ளவையாக மாற்றி, அவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். அன்புக்குரிய பிள்ளைகளே, தாயின் மடியிலிருந்து விலகி, ஆசிரியர் எனும் பெற்றோரின் அரவணைப்புக்குள் வரும் உங்கள் அனைவரதும் எதிர்காலம் எல்லா விதத்திலும் வெற்றிபெற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.

Related Posts

இலங்கையிலும்-பாடசாலை-மாணவர்களுக்கு-சமூக-ஊடகங்களை-அணுக-கட்டுப்பாடு

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த…

Read more
நிப்பா-வைரஸ்-–-இலங்கை-கவனம்

நிப்பா வைரஸ் – இலங்கை கவனம்

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,குறித்த வைரஸ் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.நிப்பா என அழைக்கப்படும்…

Read more
கை,-கால்கள்-கட்டப்பட்ட-நிலையில்-சடலம்-மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அநுராதபுரம் – இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கை, கால்கள்…

Read more
மன்னாரில்-32-வருடங்களின்-பின்னர்-திறக்கப்பட்ட-வீதி

மன்னாரில் 32 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு…

Read more

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சி

 இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி…

Read more

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

  2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச்…

Read more