அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக  பரப்பப்படும் அவதூறுகளுக்கு   கண்டனம். – Global Tamil News


மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக  போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு  வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக  இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்    ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது. பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.  குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும்.பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும்.  சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.   பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது .   பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த   இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன்   தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது – Global Tamil News

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more

புகையிலை, மதுபானம் காரணமாக ஆண்டுதோறும் 22,000 உயிரிழப்பு

 புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…

Read more

வணிகம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,000 டாலரை தாண்டியது

 வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. அதற்கமைய, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…

Read more

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த சவுதியை எவரும் பயன்படுத்த முடியாது! – Global Tamil News

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், சவுதி அரேபியா வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சவூதி அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்,…

Read more
அரச-உத்தியோகஸ்தர்கள்-மீது-நம்பிக்கையில்லா-காரணத்தால்-தான்-பிரஜா-சக்தி-உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Thursday, January 29, 2026 வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்  வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார். Join our WhatsApp group Popular…

Read more