அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது


 (எம்.மனோசித்ரா)எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இன்று இல்லை. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,இன்று எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், அரசாங்கத்துக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும் சமூகத்தில் ஒரு நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.இதற்கு முன்னர் சிறந்த அரசியல் முதிர்ச்சியுடையவர்கள் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் தற்போதுள்ள சபாநாயகர் பாராளுமன்றத்தில் எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட வாய்ப்புக்களை மட்டுப்படுத்தும் ஒருவராகவே காணப்படுகின்றார்.கடந்த ஆட்சி காலங்களில் ஓராண்டில் மாத்திரம் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை. வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை.அரசாங்கத்தால் இவை பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று தான் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சகல எதிர்க்கட்சிகளும் கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை விடுத்து ஒரே முகாமின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும். 2029ஆம் ஆண்டு 30 இலட்சம் இளைஞர், யுவதிகள் புதிய வாக்காளர்களாக தமது முதலாவது வாக்கினை பதிவு செய்யவுள்ளனர்.அடுத்து ஆட்சியமைக்கவுள்ள குழு என்ற ரீதியில் இந்த இளம் வாக்களார்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது முதலாவது அத்தியாவசிய காரணியாகும். ஆனால் தொழிநுட்பத்துடன் ஒருமித்துள்ள அவர்கள் நாம் கூறுவதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.

Related Posts

இலங்கையிலும்-பாடசாலை-மாணவர்களுக்கு-சமூக-ஊடகங்களை-அணுக-கட்டுப்பாடு

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த…

Read more
நிப்பா-வைரஸ்-–-இலங்கை-கவனம்

நிப்பா வைரஸ் – இலங்கை கவனம்

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,குறித்த வைரஸ் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.நிப்பா என அழைக்கப்படும்…

Read more
கை,-கால்கள்-கட்டப்பட்ட-நிலையில்-சடலம்-மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அநுராதபுரம் – இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கை, கால்கள்…

Read more
மன்னாரில்-32-வருடங்களின்-பின்னர்-திறக்கப்பட்ட-வீதி

மன்னாரில் 32 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு…

Read more

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சி

 இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி…

Read more

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

  2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச்…

Read more