ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், சவுதி அரேபியா வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சவூதி அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலின் போது, ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவுதி அரேபியா முழு மரியாதை அளிக்கிறது என்பதை இளவரசர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்கும் சவுதி அரேபியாவின் வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். எந்த நாடாக இருந்தாலும், இந்த நிலைப்பாட்டில் சவூதி அரேபியா உறுதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ⚠️பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதே ஒரே தீர்வு என்ற தனது நிலைப்பாட்டையும் சவூதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த ஈரான் ஜனாதிபதி, சவுதி அரேபியாவின் இந்த தெளிவான நிலைப்பாட்டை பாராட்டியதுடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பட்டத்து இளவரசர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 🌍 இந்த அறிவிப்பு, மேற்கு ஆசிய அரசியல் சூழலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவதுடன், போர் பதற்றத்தை தணிக்கும் ஒரு தூதரகச் சைகையாகவும் மதிப்பிடப்படுகிறது⚔️. #Iran #SaudiArabia #MohammedBinSalman #MiddleEastPolitics #RegionalStability#NoWar #DiplomacyFirst #USIranTensions #Geopolitics #PeaceTalks