தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026) தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) மனைவியான இவர் மீது சுமத்தப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதக் குழு ஒன்றிடமிருந்து (Unification Church) வணிக ரீதியான சலுகைகளை வழங்க லஞ்சமாக விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் ‘டயோர்’ (Dior) கைப்பை மற்றும் வைரம் பாய்ந்த நகைகள் அடங்கும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், பங்குச் சந்தை மோசடி (Stock Manipulation) மற்றும் அரசியல் நிதிச் சட்ட மீறல் போன்ற பிற குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவரது கணவர் யூன் சுக் இயோல் ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தை (Martial Law) சட்டவிரோதமாக அமுல்படுத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் உள்ளார். கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டு தொடர்பான மற்றொரு வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது. இவர் இரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட காணொலி ஒன்றில் விலையுயர்ந்த ஹேண்ட்பேக் ஒன்றை லஞ்சமாகப் பெறுவது போன்ற காட்சிகள் வெளியாகி தென் கொரிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. Tag Words: #SouthKoreaNews #KimKeonHee #YoonSukYeol #CorruptionScandal #DiorBagScandal #SeoulCourt #GlobalPolitics #JusticeServed #LKA