முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் லண்டன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 16.9 மில்லியன் ரூபாய் பொதுப் பணத்தை விக்ரமசிங்க முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஏக்கநாயக்க இரண்டாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.இந்தப் பயணம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான விரிவான அரச பயணத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு, அரசாங்கத்தின் நிதியுதவி பெற்ற பிரதிநிதிகள் குழுவுடன் இது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.விக்ரமசிங்க 2025 ஆகஸ்ட் 22 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார், இதன் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதல் இலங்கை நாட்டுத் தலைவர் என்ற பெயரையும் பெற்றார்பின்னர், மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.