காங்கேசன்துறை பொதுச் சந்தை மீண்டும் சொந்த இடத்தில் – Global Tamil News


யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொதுச் சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டது. போருக்குப் பின்னரான கால பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பொது சந்தையை மீள சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு , சந்தை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருகை தருவது குறைவாக இருந்தமையால் , வியாபாரிகள் மரக்கறி விற்பனையை கைவிட்ட நிலையில் , சந்தை கட்டடமும் மூடப்பட்டது. இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை மீள தெரிவான நிலையில் , சந்தையை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சொந்த இடத்தில் இயங்க செய்வது எனவும் , சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வீதியோர மரக்கறி விற்பனை , கடைகளில் மரக்கறி விற்பனையை இடைநிறுத்தி , சந்தையில் மாத்திரம் மரக்கறி விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், சந்தை கட்டடத்தில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளையும் விரைந்து ஏற்படுத்தி கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைவில் சந்தை வியாபார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , சந்தையில் வியாபாரத்திற்கு இடம்பெற்ற ஒருவர் இன்றைய தினமே தனது வியாபர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more
ஐரோப்பிய-ஆப்பிள்களில்-பூச்சிக்கொல்லி-காக்டெய்ல்கள்-கலந்திருப்பதாக-கூறுகிறது-புதிய-ஆய்வு

ஐரோப்பிய ஆப்பிள்களில் பூச்சிக்கொல்லி காக்டெய்ல்கள் கலந்திருப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை புதிய ஆராய்ச்சி விமர்சிக்கிறது.பதின்மூன்று ஐரோப்பிய நாடுகள் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஆப்பிள்களை…

Read more

அருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை – Global Tamil News

தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி….

Read more
ஐரோப்பாவின்-முதல்-பிரத்யேக-ட்ரோன்-கேரியரை-உருவாக்குகிறது-போர்ச்சுகல்

ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை உருவாக்குகிறது போர்ச்சுகல்

போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை வழங்கும். டாமனால் €132 மில்லியனுக்கு கட்டப்பட்டது.ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை போர்த்துக்கல் உருவாக்கி வருகிறது….

Read more
தொலைபேசியில்-அருச்சுனா-எம்.பி-க்கு-அச்சுறுத்தல்-விடுத்த-குற்றச்சாட்டு-–-பிரதேச-சபை-உறுப்பினர்கள்-உள்ளிட்ட-06பேருக்கு-பிணை

தொலைபேசியில் அருச்சுனா எம்.பி க்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை

தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா…

Read more

🚨 பாணந்துறையில்  போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! – Global Tamil News

பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து…

Read more