கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் நெடுந்தீவு தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் ________________________________________