திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருகோணமலை நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை மற்றும் அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடா்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 3 பிக்குகள் மற்றும் ஏனைய 7 பேர் என மொத்தம் 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனா். திருகோணமலை நீதவான் நீதிமன்றப் பிரதான நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன், இவர்களது விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 2-ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார். பிரதிவாதிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான சட்டத்தரணிகள் பிணை கோரினர். எனினும், காவல்துறையினா் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்வைத்த கடும் ஆட்சேபனையை அடுத்து பிணை மறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதன் தேவைக்காக நீதிமன்ற குரல் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்க நீதவான் அனுமதி அளித்துள்ளார். Tag Words: #TrincomaleeNews #DutchBayCase #BalangodaKassapaThera #CourtRuling #IllegalConstruction #CoastalConservation #SriLankaJustice #UdayaGammanpila #LKA #EasternProvince