பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News


பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில்  கிராம அலுவலர் பிரிவு மக்களும், மனோன்மணி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய   இந்நிகழ்வில்  விவசாயிகள் கௌரவிப்பு, சாதனையாளர்கள் கௌரவிப்பு, கலைஞர் கௌரவிப்பு   நிகழ்வுகள்  இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்   M. ஜெகதீஸ்வரன் அவர்களும், சமய தலைவர்கள் மற்றும் மனோன்மணி அறக்கட்டளையின் நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர்கள் அரச அதிகாரிகள்  கிராம மட்ட அமைப்புகள், கிராம மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 2025ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள், பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை தொடர்புபவர்கள், HNDA கற்போர்,  கல்வியற் கல்லூரியில் தமது கல்வியை தொடர்பவர்கள், முன்மாதிரியான கலைஞர்கள் கிராமத்தின்  சிரேஸ்ர விவசாயிகள் கௌரவிக்கப் பட்டதோடு பல சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது

Related Posts

📉 அமேசான்  16,000 பணியாளர்களை  பணிநீக்க  முடிவு  – Global Tamil News

அமேசான் (Amazon) நிறுவனம் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 16,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு…

Read more
விடுதலையில்லை!

விடுதலையில்லை!

திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் மூன்று பேர் உட்பட 10 பேரின்…

Read more
அடுத்து-கோத்தாவும்-எடுபிடிகளும்-உள்ளே?

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே?

2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலைத்…

Read more
ரணில்-மீண்டும்-உள்ளே?

ரணில் மீண்டும் உள்ளே?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க…

Read more

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்!

 முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்…

Read more
2

2

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே”…

Read more