பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல


 இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது பணியிடை நீக்கம் செய்வதற்கோ சபாநாயகருக்கு எவ்வித சட்ட அதிகாரமும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எதுல்கோட்டேயிலுள்ள அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இலங்கை நாடாளுமன்றமானது நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்கள் சட்டம் ஆகிய இரண்டு முக்கிய சட்டக் கோவைகளின் கீழேயே இயங்குவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எமது நாட்டின் நிலையியற் கட்டளைகளின் கீழ் பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவரை நீக்குவதற்கான எந்தவொரு விதிமுறையும் இல்லையெனக் குறிப்பிட்டார்.இவ்வாறான சூழலில், பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘பைபிள்’ என்று போற்றப்படும் ‘Erskine May’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்ற இலங்கை நாடாளுமன்றம் சட்ட ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராகப் புகார்கள் முன்வைக்கப்படும் போது, அவருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தைத் திரட்டி அதனை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும் என்றும், ஆனால் தற்போதைய விடயத்தில் அது இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அத்துடன், குறித்த அதிகாரிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், அவரிடம் விளக்கம் கோரப்படாமலும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார்.சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது என வலியுறுத்திய அவர், குறித்த அதிகாரிக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.தற்போதைய சபாநாயகர் புதியவர் என்பதால், சபையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு இந்த மரபுகள் குறித்துத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஊழியர் ஆலோசனைக் குழுவிற்கு (Staff Advisory Committee) அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.சட்டங்களை உருவாக்கும் உன்னத இடமான நாடாளுமன்றத்திலேயே இவ்வாறான மரபு மீறல்கள் இடம்பெறுவது சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் உயர் பதவிகளையும் பாதுகாக்க வேண்டியது சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

Related Posts

பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் இன்று (28)…

Read more

2026-இன் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் வருகை

 2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி…

Read more

நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.டித்வா சூறாவளியால்…

Read more

கல்விச் சீர்திருத்தம் ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரமல்ல, அது நாட்டின் எதிர்காலம் – சாந்த பண்டார

 கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்து, முறையான மற்றும் திட்டமிட்ட ரீதியில் அதனை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

Read more
ஆட்கடத்தல்-குற்றச்சாட்டு:-ஒருவருக்கு-20-ஆண்டுகள்-சிறைத்தண்டனை-விதித்த-நெதர்லாந்து-நீதிமன்றம்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நெதர்லாந்து நீதிமன்றம்

எரித்திரியாவைச் சேர்ந்த ஒருவரை ஆட்கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக நெதர்லாந்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து. அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவரும் அவரது கூட்டாளிகளும் புலம்பெயர்ந்தோரை கொடூரமான, வன்முறை மற்றும் இழிவான நடத்தைக்கு…

Read more

ஈரானிய ஆதரவுக் குழுக்கள் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை – மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்? – Global Tamil News

ஈராக் மற்றும் ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக வெளியிட்டுள்ள கடுமையான எச்சரிக்கைகள், மத்திய கிழக்கை மீண்டும் தீவிர பதற்ற நிலைக்குள் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் – யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்…

Read more