
கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை! தூயவன் Wednesday, January 28, 2026 முல்லைத்தீவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது -41 ) என்பவராவார். Related Posts முல்லைத்தீவு NextYou are viewing Most Recent Post Post a Comment