முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான அனைத்து விசாரணைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மேலும், இரண்டாவது சந்தேக நபரான சமன் ஏகநாயக்க என அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அவர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள விசாரணைகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைந்ததும், வழக்கின் அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்தில் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ரணில்விக்கிரமசிங்க #மேல்நீதிமன்றம் #சட்டமாஅதிபர் #குற்றப்பத்திரிகை #இலங்கையரசியல் #நீதித்துறை #சட்டநடவடிக்கை#SriLankaPolitics#RuleOfLaw