முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு விசாரணை இன்று


 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் .கடந்த வருடம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.பின்னர் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.கடந்த 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் (இன்று) நிறைவு செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

📈 இலங்கை சாியான பாதையில் பயணிக்கின்றது –  IMF   – Global Tamil News

இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) புயல்…

Read more

தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக   GMOA எச்சாிக்கை – Global Tamil News

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  ஆக்கபூர்வமான  முறையான தீர்வை வழங்கத் தவறினால்   எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…

Read more

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! – Global Tamil News

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை…

Read more

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு…

Read more

இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஐரோப்பா இனி மிக அருகில்! ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்! – Global Tamil News

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர…

Read more

பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு…

Read more