முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அழைக்கப்படுகிறார்) புதன்கிழமை (28) கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து, சமன் ஏகநாயக்க சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜராகி சட்டரீதியான சமர்ப்பணங்களை முன்வைத்தார். அரசியல் அதிகார மையங்களில் பணியாற்றிய உயரதிகாரிகள் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி பொதுமக்கள் மத்திலும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.