கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பும் ஆதரவு


தமிழத் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா திட்டத்தை முறியடிப்போம் என்றும் , போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் மூலமாக கூடியது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலையே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தல் தொடர்பாக  நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாணசபை தேர்தல்கள் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், தேர்தலை மிக விரைவில் நடாத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும் மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இவ்விடயங்கள் தொடர்பாக இந்தியா, நெதர்லாந்து, மற்றும் கனடா தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் அரசாங்கம் கொண்டுவர யோசிக்கும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் அந்த யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் அதில் அடங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சகல தமிழ் கட்சிகளுடனும் கருத்தொற்றுமைகள் ஏற்படுத்தப்பட்டு ஒருமித்த ஒரு தீர்வுத்திட்டத்தை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பல்வேறுபட்ட ஜனாதிபதிகளால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வரைபுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைபை அனைத்துக்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நாடு மிகவும் வங்குரோத்தான சூழ்நிலையில் இருக்கின்றபோதும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு அதனால் ஏற்பட்ட பல்லாயிரம்கோடி பெறுமதியான நட்டங்கள் உயிரிழப்புகள், உள்நாட்டு, வெளிநாட்டு கடன்கள் என பல்லாயிரம்கோடி இருக்கின்ற வேளையில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய கிவுல்ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக இன்னமும் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்வைப்பதுடன், இதற்கு அரசாங்கம் செலவு செய்ய உ;த்தேசித்துள்ள 23500 கோடி ரூபாயை எப்படி புரட்டப்போகிறார்கள் என்பதை அரசாங்கம் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
The post கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் பும் ஆதரவு appeared first on Global Tamil News.

Related Posts

பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more
உலக-சந்தையில்-தங்கத்தின்-விலை-வரலாற்றில்-முதல்-முறையாக-5,500-டாலர்களை-தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக…

Read more

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! – Global Tamil News

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது,…

Read more
நாவற்குழியில்-சிங்கள-வீடுகள்-விற்பனைக்கு!

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில்…

Read more
சுமந்திரன்-அழைப்பு:தகுதியில்லை-கஜேந்திரகுமார்!

சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு…

Read more

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more