அஜித்பவார் மரணத்தில் சதி? – உச்சநீதிமன்ற விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி! – Global Tamil News


மகாராஷ்டிர அரசியலின் முக்கிய தூணாக விளங்கிய துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்து குறித்து அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அஜித்பவார் அண்மைக்காலமாக ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தனது மாமா சரத்பவாரின் அணியில் இணைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. “அவர் பா.ஜ.க-வை விட்டு வெளியேறத் தயாராகி வந்த நிலையில், இந்த விபத்து நடந்திருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வருக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் (Supreme Court-monitored probe) முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற தனியார் சிறிய ரக விமானம் (Learjet 45), தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அஜித்பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. “மத்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. எனக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. உச்சநீதிமன்றம் மட்டுமே இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.. அஜித்பவாரின் இந்த திடீர் மறைவு மகாராஷ்டிர அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more
உலக-சந்தையில்-தங்கத்தின்-விலை-வரலாற்றில்-முதல்-முறையாக-5,500-டாலர்களை-தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக…

Read more

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! – Global Tamil News

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது,…

Read more
நாவற்குழியில்-சிங்கள-வீடுகள்-விற்பனைக்கு!

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில்…

Read more
சுமந்திரன்-அழைப்பு:தகுதியில்லை-கஜேந்திரகுமார்!

சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு…

Read more

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more