அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 15%-லிருந்து 25%-ஆக உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தென் கொரியா அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2025 ஜூலையில் எட்டப்பட்ட “வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை” தென் கொரிய நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்காததே இந்த முடிவுக்குக் காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வரி உயர்வு குறிப்பாக வாகனங்கள் (Autos), மரம் (Lumber), மற்றும் மருந்துகள் (Pharma) ஆகிய துறைகளை நேரடியாகப் பாதிக்கும். “தென் கொரிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ளவில்லை. அமெரிக்கா தனது தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள நிலையில், மற்ற நாடுகளும் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,” என அவர் தனது ‘Truth Social’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தென் கொரிய அரசு இந்த அறிவிப்பு குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றும், இந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ________________________________________ இந்த வரி உயர்வு உலகப் பொருளாதாரத்திலும், மின்னணு மற்றும் வாகனச் சந்தையிலும் விலையேற்றத்தை ஏற்படுத்துமா? உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்!
தென் கொரியா மீது 25% இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி! – Global Tamil News
6