யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு! நேரில் சென்றார் சுமந்திரன்! by admin January 27, 2026 written by admin January 27, 2026 யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில் , அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , கோட்டை பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனும் கலந்துரையாடினார். அதேவேளை கோட்டை பகுதியை சுற்றியுள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சுற்றி தொல்லியல் திணைக்களத்தினால் , எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளது. எல்லை கற்கள் நாட்டுவது குறித்து , எந்த தரப்புடனும் கலந்துரையாடாது , அவற்றை நாட்டியுள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , அவற்றினையும் சுமந்திரன் பார்வையிட்டார். முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்குள் வருவதனால் , அவற்றினையும் சுற்றி எல்லை கற்கள் நடப்பட்டுள்ளமையால் , இம்முறை நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது வாகன தரிப்பிடத்திற்கு இடம் இல்லாது , வீதிகளிலையே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் , அவ்வீதி ஊடான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு! – Global Tamil News
3