நுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்


 நுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது.இ.தொ.கா பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதித் தலைவர் அனுசியா சிவராஜா, போசகர் சிவராஜா, உபத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல எனத் தெரிவித்தார். யார் அரசாங்கத்திற்கு வந்தாலும், அவர்களின் நோக்கமும் செயற்பாடுகளும் மக்களுக்குச் சாதகமாக இருந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும், தவறுகள் இருந்தால் ஆலோசனைகளையே முன்வைப்போம் என்றும் கூறினார்.பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செயற்பட்ட அனுபவம் இ.தொ.காவிற்கு நீண்ட காலமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஒரு வருடமாக பாராளுமன்றத்திலும், கட்சியிலும், மக்கள் மத்திலும் தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அனைவரும் அறிவார்கள் என்றார். அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ விமர்சிக்காமல், ஆலோசனைகளையே முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மலையகத்திற்காக 4,500 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், நடைமுறையில் எந்த புதிய திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய ஜீவன் தொண்டமான், தற்போது 7,000 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்படுவதும், தாம் ஆட்சியில் இருந்தபோது ஆரம்பித்த வீடுகளையே இவ்வருடம் மக்களிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டு தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் காணி உரிமைக்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதைக் கேள்வியெழுப்பிய அவர், இன்று தற்காலிக தீர்வான சம்பள உயர்விற்காக அதே நிதி பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இதனை எடுத்துச் சொன்னால் இ.தொ.கா சம்பள உயர்விற்கு எதிரானது என தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் கூறினார்.2020 ஆம் ஆண்டு 750 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், 2024 ஆம் ஆண்டு 1,000 ரூபாவிலிருந்து 1,350 ரூபாவாகவும் அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே என அவர் நினைவூட்டினார். அன்று 2,138 ரூபா சம்பளம் வேண்டும் எனக் கூறியவர்கள், இன்று 1,750 ரூபாவை வெற்றியாகக் கூறுவது தொழிலாளர்களுக்கான துரோகம் எனவும் அவர் விமர்சித்தார்.மேலும், தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன் என்பதனை தெரிவிக்கின்றேன்.“நான் அல்ல, நாம்” என்ற சிந்தனை உருவானால்தான் மலையக சமூகம் முன்னேறும் எனக் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமல்ல, தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்ற புதிய சட்டத்தை நான் அமைச்சராக இருந்தப்போது கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த சட்டம் மீண்டும் பழைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறித்து கவலை தெரிவித்தார்.ஜனாதிபதியிடம் மலையகம் தொடர்பான முழுமையான தகவல்கள் சரியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதே பிரச்சினையின் மூலக் காரணம் எனத் தெரிவித்த அவர், டித்வா புயலுக்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளையும் அதற்கான உதாரணமாக எடுத்துக்காட்டினார்.தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், ஆளும் கட்சி மலையக பிரதிகள் அரசாங்கத்திற்குள் தலையாட்டி பொம்மைகளாக மட்டுமே உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலைக்கு தடையாக இருப்பது அரசாங்கமோ, அரசியல்வாதியோ, தொழிற்சங்கமோ அல்ல; பெருந்தோட்ட நிறுவனங்களே எனக் கூறிய ஜீவன் தொண்டமான், மலையக மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதும் அந்த நிறுவனங்களே என வலியுறுத்தினார். இனி பிரிவினைகளை தள்ளி வைத்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்; ஒற்றுமையே எமது பலம் என அவர் தெரிவித்தார்.ஊடகப்பிரிவுஜீவன் தொண்டமான் – பா.உ

Related Posts

40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு! – Global Tamil News

40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து,…

Read more

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல் தொடர்பில் கலந்துரையாடல்! – Global Tamil News

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் மற்றும் 28ஆம்…

Read more

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் காலமானார்

 விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார்  உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை அவர் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர்…

Read more
மகாராஷ்டிரவில்-விமான-விபத்து:-மாநில-துணை-முதலமைச்சர்-அஜித்-பவார்-உட்பட-6-பேர்-உயிரிழப்பு.

மகாராஷ்டிரவில் விமான விபத்து: மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்றைய தினம் புதன்கிழமை  பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்மும்பையிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம்,பாராமதி…

Read more
தமிழரசின்-தலைவர்-செயலாளரையும்-சந்தித்த-கனேடிய-உயர்ஸ்தானிகர்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன்  நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் அக்…

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு

Wednesday, January 28, 2026 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு Zameera   January 28, 2026  கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…

Read more