நுவரெலியாவில் pick meக்கு எதிராக போராட்டம்


 நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு  முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா – பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,“Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக  சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம்.மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர்.  இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர்.அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில்  போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள்…

Read more

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு கோட்டை…

Read more

📌 2022 மே 09 – அரகலய மீதான தாக்குதல்: கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு – Global Tamil News

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி, ‘அரகலய’ என அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள்…

Read more

சமன் ஏகநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அழைக்கப்படுகிறார்) புதன்கிழமை (28) கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் அடிப்படையில், இந்த…

Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி! – Global Tamil News

மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார் (66), இன்று காலை பாராமதி அருகே ஏற்பட்ட கோரமான விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனே மாவட்டம், பாராமதி…

Read more
பிரஜா-சக்திக்கு-எதிராக-பருத்தித்துறை-பிரதேச-சபையில்-தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து…

Read more