தனிப்பட்ட காரணங்களால் இன்று வர முடியாது, இரண்டு வார கால அவகாசம் தாருங்கள்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களால் இன்று (27) நிதிக் குற்ற விசாரணை பிரிவில் நேரில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் தொடர்பில் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுவதற்கு, மேலும் 02 வாரங்கள் அவர் கால அவகாசம் கோரியுள்ளதாக, நிதிக் குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. சிரிலிய வங்கிக் கணக்கை முன்னெடுத்துச் சென்றமையூடாக, நிதி மோசடியில் அவர் ஈடுபட்டார் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே ஷிரந்தி ராஜபக்ச, நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.