ஐக்கிய இராச்சிய அரசாங்கம் அண்மையில் (ஜனவரி 21, 2026) புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான தேசிய வடிவமைப்பு வழிகாட்டுதல்களை (National Design Guidance) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் வீடுகள் “கார்களை மையமாகக் கொண்டதாக” (Car-dominated) இருக்காது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் (Architects) பின்வரும் முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்: புதிய வீடுகள் கட்டப்படும்போது, கடைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் (GP Surgeries) போன்றவை நடந்து செல்லும் தூரத்திலேயே (Walking distance) இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குடியிருப்பாளர்கள் அன்றாடத் தேவைகளுக்காக வாகனங்களைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைக்கும். வடிவமைப்பாளர்கள் தங்கள் திட்டமிடலில் வாகனங்களுக்குக் கடைசி இடத்தையே வழங்க வேண்டும். முன்னுரிமை வரிசையின் படி முதலாவதாக பாதசாரிகள் (Pedestrians), இரண்டாவதாக மிதிவண்டிப் பயணிகள் (Cyclists), மூன்றாவதாக பொதுப் போக்குவரத்து (Public Transport) நான்காவதாக சொந்த மோட்டார் வாகனங்கள் (Motor Vehicles) அமையும். இதன் முக்கிய நோக்கங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதாவது கார் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல். மக்கள் நடப்பதையும் மிதிவண்டி ஓட்டுவதையும் ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலற்ற, அமைதியான மற்றும் பசுமையான பொது இடங்களை உருவாக்குதல் போன்றன இதன் நோக்கங்களாக அமைந்துள்ளன. இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இனிமேல் சமர்ப்பிக்கப்படும் அனைத்துப் புதிய பெரிய அளவிலான வீடமைப்புத் திட்டங்களும் (Major Housing Developments) இந்த விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். ஏற்கனவே அனுமதி பெற்று, இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத திட்டங்களுக்கு, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் தங்களை இந்தப் புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கால அவகாசம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள 1.5 மில்லியன் வீடுகளும் இந்தப் புதிய “பசுமை மற்றும் நடப்பதற்கு ஏற்ற” (Walkable) கொள்கையின் கீழேயே அமையும். கட்டுமானங்களுக்கான புதிய திட்டங்களைச் சமர்ப்பிக்கும்போது, அவை பாதசாரிகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கின்றன என்பதை நிரூபிக்க வேண்டும். வீடுகளின் முன்புறம் பெரிய கார் நிறுத்துமிடங்களை (Driveways) அமைப்பதற்குப் பதிலாக, பொதுவான இடங்களில் பசுமையுடன் கூடிய நிறுத்துமிடங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுவார்கள். சாலைகளை விட, மிதிவண்டிப் பாதைகள் (Cycle Lanes) மற்றும் பாதுகாப்பான நடைபாதைகளுக்கே அதிக முதலீடு செய்ய வேண்டும். Tag Words: #UKHousing #UrbanPlanning #SustainableLiving #WalkableCities #GreenEnergy #Architecture #PedestrianSafety #LKA #FutureCities #ClimateAction
🚶♂️ பிாித்தானியாவில் இனி வீடுகள் “கார்களை மையமாகக் கொண்டதாக இருக்காது – Global Tamil News
8