ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது – ஹர்ஷண ராஜகருணா


 (எம்.மனோசித்ரா)ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது. பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கம் இனம், மதம் மற்றும் கலாசாரத்தின் மீது கோபம் கொண்டுள்ளது. யார் என்ன சீருடை அணிந்திருந்தாலும் தமக்கெதிராக செயற்பட்டால் பதில் தாக்குதல் நடத்துவோம் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது.1980களில் தமது அரசியல் கொள்கைகளைக் கடைபிடிக்காதவர்களை இவர் இவ்வாறு தான் கொன்று குவித்தனர். ஜே.வி.பி. என்பது ஒரு பயங்கரவாத கட்சியாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூறவேண்டிய குழுவாகும். அதனையே தற்போது அமைச்சர் லால் காந்த மீண்டும் நினைவுபடுத்துகின்றார்.பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அது தமக்கு தேவையற்றது என்றும், தம்மை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு பதில் தாக்குதல் உண்டு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இது மாத்திரமல்ல தேர்தலுக்கு முன்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்.கம்பஹாவில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான் இந்த நாட்டுக்கு துஷ;ட சக்திகள் என அந்த பொலிஸார் கூறியுள்ளனர். அது யாருடைய நிலைப்பாடு? இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே பொலிஸார் கூறுகின்றனர். இதேபோன்று திருகோணமலையிலும் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டது மாத்திரமின்றி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவே ஜே.வி.பி.யின் கலாசாரமாகும். இதனை நாட்டின் கலாசாரமாகவும் மாற்றுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார். 

Related Posts

📈 இலங்கை சாியான பாதையில் பயணிக்கின்றது –  IMF   – Global Tamil News

இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) புயல்…

Read more

தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக   GMOA எச்சாிக்கை – Global Tamil News

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  ஆக்கபூர்வமான  முறையான தீர்வை வழங்கத் தவறினால்   எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…

Read more

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! – Global Tamil News

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை…

Read more

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு…

Read more

இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஐரோப்பா இனி மிக அருகில்! ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்! – Global Tamil News

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர…

Read more

பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு…

Read more