மிரள வைக்கும் தங்கத்தின் விலை! உலக சந்தையில் உச்சத்தை எட்டி புதிய வரலாறு

by ilankai

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான கணிசமான முதலீடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், தங்கத்தின் விலை மேலும் உயர்வடையக்கூடும் எனவும், இவ்வருட இறுதிக்குள் அது 5,500 டொலரை தாண்டும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன், இதற்கு இணையாக ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.74  சதவீதத்தால் அதிகரித்து 107.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு அவுன்ஸ் பெலேடியத்தின் (Palladium) விலை 0.17  சதவீதத்தால் அதிகரித்து 2,013.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

Related Posts