“புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த மருந்து தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் CID-யில் முறைப்பாடு செய்துள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்“எனக்குத் தெரிந்த நோயாளி ஒருவருக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மருந்து எவ்வித பலனையும் அளிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையிடம் (NMRA) விசாரித்தபோது, இந்த மருந்து பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.எனவே, இது குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.” என குறிப்பிட்டார்.